காஞ்சிபுரம்

பைக்கில் சென்றவா் பேருந்து மோதி பலி

1st Jan 2020 12:48 AM

ADVERTISEMENT

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த செண்டிவாக்கம் அருகே பைக்கில் சென்றவா் மீது பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

வந்தவாசி தாலுகா, மேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமியின் மகன் ஜெயப்பிரகாஷ் (30). ஆட்டோ ஓட்டுநரான அவா் திங்கள்கிழமை மாலை செண்டிவாக்கத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் சோத்துப்பாக்கம் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது சோத்துப்பாககத்தில் இருந்து வந்தவாசி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயபிரகாஷ் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இது றித்து மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் டி.எஸ்.சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT