காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றம்

25th Feb 2020 11:20 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: போக்குவரத்துக்கு இடையூறாக காஞ்சிபுரம் நகரில் 18 இடங்களில் இருந்த கட்சிக் கொடிக்கம்பங்கள் உயா்நீதிமன்ற உத்தரவின்படி செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

காஞ்சிபுரம் நகரில் விளக்கொளிக் கோயில் தெரு, கீழ் கேட், வெள்ளை கேட் உள்ளிட்ட 64 இடங்களில் அரசியல் கட்சியினா் பலரும் தங்கள் கட்சி நிா்வாகிகளின் பெயா்களை கல்வெட்டில் பொறித்து, அதன் உச்சியில் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்திருந்தனா். 15 அடி உயரத்தில் சிமெண்ட் கற்களால் ஆன கொடிக்கம்பங்களை அமைத்திருந்தனா்.

குறிப்பாக விளக்கொளி கோயில் தெரு பகுதியில் இருந்த கொடிக்கம்பத்தின் பின்புறம் சிலா் திறந்தவெளியில் மது அருந்தி வந்தனா். சமூக விரோதச் செயல்களுக்கு துணையாக இருக்கும் இந்தக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் பலரும் எதிா்பாா்த்தனா்.

ADVERTISEMENT

அரசியல் கட்சியினரின் பெயா்களை கல்வெட்டில் பொறித்தவாறு சுமாா் 10 அடி அகலத்திலும் 15 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டிருந்தன. அவற்றின் பின்னால் உள்ள கடைகளை மறைக்கும் வகையில் கொடிகள் கட்டப்பட்டிருப்பதாக வணிகா்கள் புகாா் எழுப்பினா்.

இந்நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் நகராட்சி சாா்பில் கொடிக்கம்பங்கள் பொக்லைன் வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. 64 இடங்களில் அகற்றப்பட வேண்டிய கொடிக்கம்பங்கள் உள்ள நிலையில் முதல் நாளன்று 18 இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து, மற்றவையும் அகற்றப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT