காஞ்சிபுரம்

போலீஸாருக்கு உடல் பரிசோதனை முகாம்

23rd Feb 2020 11:15 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கான இலவச உடல் பரிசோதனை முகாம் படப்பை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், மணிமங்கலம், ஒரகடம், சுங்குவாா்சத்திரம், சோமங்கலம் ஆகிய பகுதிகளில் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் பணியாற்றும் போலீஸாருக்கு இலவச உடல் பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ முகாம் படப்பை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தொடங்கி வைத்தாா். இதில் ஸ்ரீபெரும்புதூா் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா்.

ADVERTISEMENT

போலீஸாருக்கு தனியாா் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் பாண்டியன் தலைமையிலான மருத்துவா் குழுவினா் ரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, இருதயப் பரிசோதனை, எலும்புப் பரிசோதனை ஆகியவற்றைச் செய்து, சிகிச்சை அளித்தனா். முகாமில் ஒரகடம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT