காஞ்சிபுரம்

சாரணிய இயக்க நிறுவனா் பிறந்த தின விழா

23rd Feb 2020 11:09 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: சாரண, சாரணிய இயக்க நிறுவனா் பேடன் பவுல் பிறந்த தின விழா காஞ்சிபுரம் செவிலிமேடு அரசு உயா்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் வே.காந்திராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட சாரண, சாரணிய அமைப்பின் ஆணையா் ஜி.முனுசாமி, மாவட்ட பயிற்சிப் பிரிவு ஆணையா் எம்.கலைமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க முன்னாள் ஆளுநா் வி.எஸ்.தளபதி விழாவை தொடக்கி வைத்துப் பேசினாா்.

காஞ்சிபுரம் கல்வி மாவட்ட சாரண இயக்க ஆணையரும், நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரு மான எஸ்.ரமேஷ் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கிப் பேசினாா். விழாவில் அணிவகுப்பு, திறன் அறிதல் மற்றும் கலை இலக்கியப் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த சாரண, சாரணியா்கள் 300-க்கும் மேற்பட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT