காஞ்சிபுரம்

ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில்மாசி அமாவாசை வேள்வி பூஜை

23rd Feb 2020 11:14 PM

ADVERTISEMENT

 

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் மாசி அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, சித்தா் பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் சிலைக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு சித்தா் பீடத்துக்கு வந்த அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓம்சக்தி பீடம் அருகே பெரிய யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. அதில் முக்கோணம், சதுரம் ஆகிய வடிவங்களில் 117 சிறிய யாக குண்டங்களும், சதுர வடிவிலான பெரிய யாககுண்டமும் அமைக்கப்பட்டன. மாலை 3.20 மணிக்கு பெரிய யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, வேள்வி பூஜையை பங்காரு அடிகளாா் தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் முன்னிலை வகித்தாா். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெரிய யாககுண்டத்தில் நவதானியங்களையும், ஹோமக் குச்சிகளையும் செலுத்தி அம்மனை வழிபட்டனா். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

வேள்வி பூஜைக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்டம், கைலாசபுரம், தில்லைநகா், சீனிவாசபுரம், திருவானைக்காவல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சக்தி பீட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT