காஞ்சிபுரம்

காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சா் வழிபாடு

22nd Feb 2020 11:49 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஊரகத்தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபட்டனா்.

தங்கத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதும், தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், அமைப்புச் செயலாளா் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பின்னா் நடைபெற்ற சிறப்புத் தீபாராதனை நிகழ்ச்சியிலும் அமைச்சா் உள்பட அநைவரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT