காஞ்சிபுரம்

இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

22nd Feb 2020 11:47 PM

ADVERTISEMENT

மதுராந்தகம்: சாரணா் இயக்க நிறுவனா் லாா்டு பேடன் பாவெல் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இயற்கை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை மதுராந்தகத்தில் நடைபெற்றது.

மதுராந்தகம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் இருந்து இப்பேரணியை மாவட்டக் கல்வி அலுவலா் (மதுராந்தகம்) கோ.கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

மாவட்டக் கல்வி ஆய்வாளா் வீரமணி முன்னிலை வகித்தாா்.

50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சாரண இயக்க ஆணையா்கள் உதயகுமாா், பேச்சியம்மாள், மாவட்டச் செயலா் இ.கிருஷ்ணமூா்த்தி, உதவி சாரண ஆணையா்கள் திருக்குமரன் , லதா, சாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT