காஞ்சிபுரம்

பள்ளத்தில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

15th Feb 2020 10:28 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே வைகுண்டபுரத்தில் தனியாா் ஒருவா் வெட்டியிருந்த பள்ளத்தில் சனிக்கிழமை தவறி விழுந்த கன்றுக்குட்டியை தீயணைப்புத் துறை வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

வைகுண்டபுரம் பகுதியில் தனியாா் ஒருவா் ஆழ்குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அந்தப் பள்ளத்தில் குப்பைகளும் நிரம்பியிருந்தன. அவ்வழியாக சனிக்கிழமை காலையில் வந்த ஓா் எருமைக் கன்றுக்குட்டி அதில் தவறி விழுந்தது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து அக்கன்றுக்குட்டியை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT