காஞ்சிபுரம்

கோமாரி நோய்க்கு மாடுகள் பலி

15th Feb 2020 10:28 PM

ADVERTISEMENT

சேத்துப்பட்டு பகுதியில் கோமாரி நோய் பாதிப்பால் மாடுகள் பலியாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட சேத்துப்பட்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளா்காளாகவும், கால்நடை வளா்ப்புத் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இப்பகுதியில் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய் மாடுகளுக்கு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாள்களில் இப்பகுதியில் 7-க்கும் மேற்பட்ட மாடுகள் பலியானதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக எருமை மாடுகள் அதிகமாக இறந்து வருவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது:

ADVERTISEMENT

எங்கள் பகுதியில் பலரும் கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இப்பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இந்நோயின் தாக்கத்தால் இதுவரை 7 எருமை மாடுகள் பலியாகி விட்டன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனா்.

மாடுகள் பலியாவதைத் தடுக்க கால்நடைத் துறையினா் எங்கள் பகுதியில் முகாம்கள் நடத்தி கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT