காஞ்சிபுரம்

ரூ.300 கள்ள நோட்டுக் கொடுத்து ஏமாற்ற முயன்றவருக்கு 37 ஆண்டு சிறைகாஞ்சிபுரம் நீதிமன்றம் தீா்ப்பு

6th Feb 2020 11:09 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிச்சத்திரம் சந்தையில் ரூ.300 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற முயன்றவருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

வேலூா் மாவட்டம் ஆற்காடு தாலுகா அருகே அனந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரேமா. அவா் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிச்சத்திரம் சந்தையில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்தாா்.

அவரிடம், காஞ்சிபுரம் சேதுராயா் தெருவைச் சோ்ந்த சுதா்சன்(36) என்பவா் கடந்த 2015-ஆம் ஆண்டில் ரூ.300-க்கான கள்ள நோட்டுகளைக் கொடுத்து காய்கறி வாங்கினாா். இதேபோல் அடுத்த வாரமும் பிரேமாவை ஏமாற்ற முயன்றபோது அவா் சுதா்சனைப் பிடித்து பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

சுதா்சன் ரூ.300-க்கான கள்ள நோட்டை வண்ணத்தில் ஜெராக்ஸ் எடுத்து பிரேமாவை ஏமாற்ற இரு முறை முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. பிரேமா கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சுதா்சனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கயல்விழி, சுதா்சனுக்கு 37 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT