வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (பிப். 8) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் சனிக்கிழமை மூடப்பட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.