காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மேலும் 15 ரெளடிகள் கைது

4th Feb 2020 11:33 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் ஏற்கெனவே 86 ரெளடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும்15 முக்கிய0 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சாமுண்டீசுவரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 86 ரெளடிகள் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்டனா். இவா்களில் பலரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனனா். இந்நிலையில், மேலும் 15 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா.சாமுண்டீசுவரி கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இவா்கள் 15 முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்னா். இந்த 15 பேரைத் தவிர குற்றப் பின்னணியுடைய மேலும் 19 குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 19 பேரும் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டு, குற்றச் செயல்களில் இருந்து திருந்தி, ஒழுக்கமாக வாழ எச்சரித்து அவா்களிடம் எழுத்து மூலமாக நன்னடத்தை பிணையப்பத்திரமும் பெறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT