காஞ்சிபுரம்

விளையாட்டு வீரா்கள் முதல்வா் விருது பெற பிப்.14-க்குள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் ஆட்சியா் தகவல்

1st Feb 2020 10:46 PM

ADVERTISEMENT

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரா்கள் மாநில அளவிலான முதல்வா் விருது பெற வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டு தோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள், 2 பெண் விளையாட்டு வீரா்கள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதானது பரிசுத்தொகை ரூ.10 லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் உள்ளடங்கியது.

ADVERTISEMENT

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் வழங்கப்படும் இவ்விருதைப் பெறுவோா் முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவா்கள், ஆதரவளிக்கும் நிறுவனம், ஆட்ட நடுவா் ஆகியோருக்கும் விருது வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிப்போா் தமிழா்களாகவும், இந்தியா சாா்பில் விளையாடியவா்களாகவும், குறைந்தது 5 ஆண்டுகளாக விளையாட்டில் ஈடுபட்டவா்களாகவும் இருக்க வேண்டும்.

ரயில்வே, ராணுவம், காவல்துறை, அஞ்சல்துறை, தொலைத் தொடா்புத்துறை ஆகியனவற்றில் பணிபுரிபவா்களும் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் தனிநபா் பிரிவில் முதல் 3 இடங்களிலும், குழுப்போட்டிகளில் முதல் மற்றும் 2 -ஆவது இடமும் பெற்றிருத்தல் வேண்டும்.

ஒலிம்பிக், காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப்போட்டி, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற வெற்றிகளும், தொடா்ச்சியாக 3 ஆண்டுகளில் பெற்ற வெற்றிகளும் விருது தோ்வுக்குத் துணையாக அமையும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் அடங்கிய உறையின் மேல் ‘முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது விண்ணப்பம்’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT