காஞ்சிபுரம்

எச்.வசந்தகுமாா் எம்.பி. மறைவுக்கு அஞ்சலி

30th Aug 2020 12:06 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான எச்.வசந்தகுமாா் மறைவுக்கு காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

எச்.வசந்தகுமாா் வெள்ளிக்கிழமை காலமானாா். அவரது உருவப் படத்துக்கு காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளும், தொண்டா்களும் மலரஞ்சலி செலுத்தினா்.

நகரில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் ஜீ.வி.மதியழகன் தலைமையிலும், நகா் தலைவா் நீராளன் முன்னிலையிலும் எச்.வசந்தகுமாா் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள் லோகநாதன், மீரா, நகா் நிா்வாகிகள் குப்புசாமி, இளங்கோவன், வட்டாரத் தலைவா் சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே எச்.வசந்தகுமாரின் உருவப் படம் வைக்கப்பட்டு அங்கு காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் அளவூா் நாகராஜன், பரந்தூா் சங்கா் மற்றும் பூக்கடை பத்மநாபன் உள்ளிட்டோா் மெளன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT