காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் அமைச்சர் பெஞ்சமின் திறந்து வைத்த நியாய விலைக்கடை

21st Aug 2020 04:41 PM

ADVERTISEMENT

குன்றத்தூர் பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21.30 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம் மற்றும் கலையரங்கத்தை அமைச்சர் பா.பெஞ்சமின் திறந்துவைத்தார்.

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2019-20 நிதியாண்டில் குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பெரிய தெரு பகுதியில் ரூ13.80 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடைக்கு பதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கம் மற்றும் நியாயவிலை கடை கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு கலையரங்கம் மற்றும் நியாய விலை கடை கட்டடத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதில் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், வட்டாட்சியர் முத்து, ஸ்ரீபெரும்புதூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ராமசந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Kancheepuram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT