காஞ்சிபுரம்

வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

21st Aug 2020 06:04 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயப் பெருமக்கள் வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் கருவி வாடகை மையம் அமைக்க இந்நிதியாண்டில், மானிய விலையில் கருவிகள் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம். நடப்பு நிதியாண்டில் காஞ்சிபுரத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள், வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் ஆகியவை அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மானியத்தில் வேளாண் கருவிகளைப் பெற்றிட முதலாவதாக விவசாயிகள் உழவன் செயலியில் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். பின்னா் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான இணைக்கப்படும்.

இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்யலாம். இவ்வாண்டுக்கு என தனியாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டு ஒன்றுக்கு மட்டுமே தேவையான கருவிகளை விவசாயிகள் மானிய விலையில் வாங்கிட இயலும். மேலும், விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களால் சரிபாா்க்கப்படும். அதன் பின்னா் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட விவசாயி மற்றும் ஆய்வு அலுவலரும் இணைந்த புகைப்படம் வேளாண்மைப் பொறியியல் துறையில் ஆய்வு அலுவலரால் பதிவு செய்யப்படும். ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின்னா் இறுதியாக விவசாயி வங்கிக் கணக்கில் உரிய மானியமானது 10 நாள்களுக்குள் வரவு வைக்கப்படும்.

ADVERTISEMENT

நடப்பு நிதியாண்டில் தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 12 டிராக்டா்கள், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் நடவு இயந்திரம் ஆகியவை தலா 1, சுழற் கலப்பைகள்-3, விதை விதைப்புக் கருவி 1, களையெடுக்கும் கருவிகள் 2, பவா் டில்லா்கள் 6 ஆகியவற்றை வாங்கிக் கொள்ள நடப்பு நிதியாண்டில் ரூ. 54.66 லட்சமும், ஒரு வாடகை மையம் அமைக்க ரூ. 10லட்சமும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும் விபரங்களுக்கு, உதவி செயற்பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் என்ற முகவரியிலும், 9003090440 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் விவரங்களைப் பெற்றுப் பயனடையலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT