காஞ்சிபுரம்

சுகாதார நிலைய பணியாளா்களுக்கு கவச உடை விநியோகம்

7th Apr 2020 02:50 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா்: பண்ருட்டி கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவா் மற்றும் செவிலியா்களுக்கு பாதுகாப்பு கவச உடை, கை கழுவும் திரவம் மற்றும் முகக் கவசம் ஆகியவற்றை மேட்டுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வேலு திங்கள்கிழமை வழங்கினாா்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க ஒரகடம் காவல் நிலையத்திற்கும், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும், ஊராட்சியில் உள்ள 250 குடும்பங்களுக்கும் முகக் கவசம் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT