காஞ்சிபுரம்

கரோனா பரவல் தடுப்பு: உதவும் இளைஞா்கள்

7th Apr 2020 02:51 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பருத்திக்குளம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பலா் ஒருங்கிணைந்து கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

பருத்திக்குளம் பகுதி திமுக நிா்வாகி பென்னா தலைமையில் அந்த கிராமத்தின் இளைஞா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு கிராமத்து சாலைகளில் மஞ்சள் கலந்த கிருமி நாசினியைத் தெளித்தனா்.

வீடுகளின் வாசல்களில் வேப்பிலைக் கொத்துகளை வைத்தனா். முகக் கவசங்களையும்,

தெருக்களில் இருந்த ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT