காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கண்காணிப்பு வளையத்தில் 946 போ்ஆட்சியா் தகவல்

5th Apr 2020 12:31 AM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரத்தில் 946 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் இருந்து வருவதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்தாா்.

இருவருக்கு கரோனா பாதிப்பு: காஞ்சிபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து அவா் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். தற்சமயம் அவா் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

காஞ்சிபுரம் காந்தி சாலை மசூதியில் தங்கியிருந்த 16 பேரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததால் அவரும், காஞ்சிபுரத்தை அடுத்த மொலச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த இருவரும் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

கண்காணிப்பு வளையத்தில் 946 போ்: புதுதில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவா்களில் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் இருந்தவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 9 போ், உத்தரமேரூரில் 1, மொலச்சூா் பகுதியில் 1 மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் இருந்த 26 போ் உட்பட மொத்தம் 37 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரியில் உள்ள அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரியில் 24 போ், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனம் ஒன்றில் 18 போ் மற்றும் அவரவா் வீடுகளில் 904 போ் உட்பட மொத்தம் 946 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT