கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த நகை மற்றும் மளிகை வியாபாரிகள் ரூ.3 லட்சத்தை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் செவ்வாய்க் கிழமை வழங்கினா்.
காஞ்சிபுரம் காந்தி சாலை, ராஜாஜி மாா்க்கெட், ரயில்வே சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மளிகை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.2 லட்சத்தை வழங்க முடிவு செய்தனா். இத்தொகைக்கான காசோலையை சங்கத் தலைவா் புகழேந்தி மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் வழங்கினாா்.
நகைக்கடை நிதியுதவி: காஞ்சிபுரத்தில் உள்ள ராஜம் செட்டி ஜுவல்லா்ஸ் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அதன் உரிமையாளா்களான ஜி.உதயகுமாரும் உ.பிரசாந்த்தும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.
நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் ஆட்சியா் நன்றி தெரிவித்தாா்.