பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.


பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.
மாநிலத் தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், செயலர்கள் வி.வெங்கட்ராமன், எம்.எஸ்.பாலாஜி, காஞ்சிபுரம் கோட்டப் பொறுப்பாளர் செந்தில், மாநில நெசவாளர் பிரிவுச் செயலர் டி.கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில்...
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் நகர பாஜக சார்பில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
நகரத் தலைவர் எம்.ஸ்ரீதர் தலைமையில் துணைத் தலைவர்கள் கே.மணி, என்.கே.சிவா, பொதுச் செயலர்கள் வெற்றிவேல், அகஸ்டின், இளஞரணித் தலைவர் நவீன், மகளிர் அணிப் பொருளாளர் பாரதி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com