காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பலத்த மழை

13th Sep 2019 05:01 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை மாலையில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததையடுத்து நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் மழைநீர் தேங்கியது. 
காஞ்சிபுரத்தில் புதன்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது. வியாழக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 4 மணி முதல் மழை விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.இரவு 7 மணிக்கு மேல்  இடி, மின்னலுடன்  கூடிய பலத்த மழை தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் பெய்தது.
இதனால் அரசு மருத்துவமனை சாலை, காந்தி சாலை, மேட்டுத்தெரு, இரட்டை மண்டபம், விளக்கொளி கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்தது. கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் பலத்த மழை பெய்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT