வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

வரதராஜப் பெருமாளுக்கு ரூ.18.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை காணிக்கை

DIN | Published: 12th September 2019 04:44 AM
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த உத்திராதி மடத்தின் குரு ஸ்ரீசத்யாத்ம தீர்த்த சுவாமிகள். (உள்படம்) பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க ஆபரணம்.


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ரூ.18.5லட்சம் மதிப்பிலான தங்க  ஆபரணத்தை உத்திராதி மடத்தின் குரு ஸ்ரீசத்யாத்ம தீர்த்த சுவாமிகள் புதன்கிழமை வழங்கி சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு உத்திராதி மடத்தின் குரு ஸ்ரீசத்யாத்ம தீர்த்த சுவாமிகள் வருகை புரிந்தார். அவர் ரூ.18.5 லட்சம் மதிப்பிலான  தங்கத்தாலான ஸ்ரீசத்யாத்ம பதக்கத்தை பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினார். அதை கோயில் நிர்வாகத்தின் சார்பில்  இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் ஆ.தியாகராஜன் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் மூலவரான வரதராஜப் பெருமாள், பெருந்தேவித்தாயார், நரசிம்மர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சந்நிதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு