வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

மேல்மருவத்தூரில் தியான மண்டபம் ஆளுநர் இன்று திறந்து வைக்கிறார்

DIN | Published: 12th September 2019 04:43 AM

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை திறந்து வைக்கிறார். 
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு வரும் பக்தர்களுக்கு தியானம் செய்வதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தும் வகையில், ஆன்மிக இயக்கத்தினர் மாபெரும் தியான மண்டபத்தை அடிகளாரின் வழிகாட்டுதலின்படி கட்டி இருந்தனர். இந்த தியான மண்டபத்தைத் திறந்து வைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மேல்மருவத்தூர் சித்தர்பீடம் வருகிறார். 
அங்கு அவருக்கு சித்தர்பீடத்தின் சார்பாக, சிறப்பான  வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் கருவறை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்கிறார்.                                                                                                                                       
இதையடுத்து விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.  ஆன்மிக இயக்க அறங்காவலர் ஏ.கே.வெங்கிடசாமி வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்து, தியான மண்டபத்தைத் திறந்து வைக்கிறார். பங்காரு அடிகளாரின் 80-ஆவது பிறந்தநாளையொட்டி, மாலை 6 மணிக்கு ஒலி, ஒளி வடிவிலான இசை ஊற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை