வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

பாரம்பரிய நெல் நடவு

DIN | Published: 12th September 2019 04:43 AM


மதுராந்தகத்தை அடுத்த திருமுக்காடு கிராமத்தில் பாரம்பரிய நெல் நடவுப் பணி புதன்கிழமை தொடங்கியது. 
திருக்காடு கிராமத்தில் இயற்கை விவசாயத்தை சிறப்பான முறையில் விவசாயி ஆனந்தன் செயல்படுத்தி வருகிறார். 
அவரது 2 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவணி  என்ற நெல் நடவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இங்கு ஒற்றை நாற்று முறையில் நெல் நாற்றுகள் நடப்பட்டன. 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது: பாரம்பரிய நெல்லான கருப்பு கவணி என்ற நெல்லில் இருந்து கருப்பு நிற அரிசி வரும். இதை சமைத்து சாப்பிட்டால் மூட்டுவலி தீரும். நாய்க் கடிபட்டவர்கள் குணமாவார்கள் என்று தெரிவித்தனர். 
இந்நிகழ்ச்சியில் கிரீன் பவுண்டேசன் நிர்வாகி ஜெயச்சந்திரன், ஹேண்ட் இன் ஹெண்ட் தொண்டு நிறுவன மேலாளர் கதிரேசன், வேளாண் ஆலோசகர் ஆவணிப்பூர் தினேஷ்குமார், நீடாமங்கலம் ராஜவேலு, அச்சிறுப்பாக்கம் வேளாண்மைத்துறை ஆத்மா திட்ட மேலாளர்கள் ஜெகதீஷ், சுரேஷ், இயற்கை வேளாண் விவசாயி அரப்பேடு ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்கை வேளாண் ஆலோசகர்கள் எட்வின், ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர். 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு