வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வுப் பேரணி

DIN | Published: 11th September 2019 04:29 AM


ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் பங்கேற்ற போஷன் மா விழிப்புணர்வுப் பேரணி ஸ்ரீபெரும்புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செப்டம்பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக மத்திய அரசு அறிவிவித்தது. அதன்படி, சத்துணவுத் திட்டத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போஷன் மா என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
ஸ்ரீபெரும்புதூர் மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவர் அருள்ராஜ், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் உஷாராணி, ஸ்டெல்லா, சிறியபுஷ்பம், ஸ்ரீதேவி, கொளத்தூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இப்பேரணி திருவள்ளூர் சாலை, காந்தி சாலை, வழியாகச் சென்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.இதில், சுமார் 400க்கும் மேற்பட்ட இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்டத் திட்ட அலுவலர் க.சற்குணா தொடக்கி வைத்தார். மதுராந்தகம் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மா.தமிழ்செல்வி, ஜி.எம்.ஆர். வரலட்சுமி பவுண்டேசன் பாதுகாப்பு அலுவலர் என்.பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு