வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி

DIN | Published: 11th September 2019 04:29 AM


வேலையில்லாத சிறுபான்மையின இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சிகள்  தொடங்க இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் சார்பில் வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையின இளைஞர்களுக்கு இலவச திறன் வளர்ப்புப் பயிற்சி  வழங்கப்பட உள்ளது. 
இப்பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்புப் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும். இப்பயிற்சி வகுப்பு 46 நாள்கள்  நடைபெறும். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் வீதம் மொத்தம் 40 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 
மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்,புத்தமதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெறுவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். 
ஒரு பயனாளிக்கு பயிற்சி உதவித் தொகையாக ரூ.1,534 வழங்கப்படும். உண்டு,உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்பட மாட்டாது. 
இதற்கான நேர்காணல் வாலாஜாபாத் எண்.64.சி.சாலைத் தெரு, புத்தேரி, குஜராத்சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
பயிற்சி பெற விரும்புவோர் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மத்திய காலணி பயிற்சி நிலையம். செல்லிடப்பேசி89398 13412 அல்லது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை. தொலைபேசி 04428514846 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு