காஞ்சிபுரம்

தனி ஊராட்சி அமைக்க ஆட்சியரிடம் மனு

10th Sep 2019 04:52 AM

ADVERTISEMENT


திருப்போரூர் வட்டம் பொன்மார் ஊராட்சியில் இருந்து போலச்சேரி கிராமத்தை தனி ஊராட்சியாகப் பிரிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் ஆட்சியர் பா.பொன்னையாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
கிராமத்தினர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:   போலச்சேரி கிராமம் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த கிராமம் . இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் கிராமத்திற்கு பேருந்துவசதி, மருத்துவமனை, தபால் நிலையம், வங்கி வசதி, அரசு அலுவலகங்கள் என எதுவுமே இல்லை. 
அனைத்துத் தேவைகளுக்கும் நாங்கள் பொன்மார் ஊராட்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, போலச்சேரி கிராமத்தைப் பிரித்து தனி ஊராட்சியாக அமைத்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT