காஞ்சிபுரம்

மதுபானம் விற்ற 7 பெண்கள் உள்பட 8 பேர் கைது

7th Sep 2019 04:03 AM

ADVERTISEMENT


மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேட்டில் வெளி மாநில மதுபாட்டில்களைக் கடத்தி வந்து விற்றதாக 7 பெண்கள் உள்பட 8 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை  கைது செய்தனர்.
சென்னை-புதுச்சேரி நெடுஞ்சாலையை ஒட்டி சூனாம்பேடு காலனி உள்ளது. இப்பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்களைக் கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு தகவல் வந்தது. 
இதனை அடுத்து அவரது உத்தரவின்படி, மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் வழிகாட்டுதலின்படி, சூனாம்பேடு காவல் ஆய்வாளர் தாரனேஸ்வரி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை செய்தனர். 
அப்போது வெளிமாநில மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்த சூனாம்பேடு காலனியைச் சேர்ந்த ஜீவானந்தம் மனைவி மேனகா (30),  குட்டி  மனைவி அருள்ஜோதி (32), சரவணன் மனைவி சுப்புலட்சுமி (40), புகழேந்தி மனைவி மல்லீஸ்வரி (40), மனப்பாக்கம் ராஜலிங்கம் மனைவி வெண்ணிலா (42), மணி மனைவி புவனேஸ்வரி (33), ஈசூர் சேகர் மனைவி முனியம்மாள் (42), முனுசாமி மகன் சேகர் (65) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இது குறித்து சூனாம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT