காஞ்சிபுரம்

குற்றச் சம்பவங்களைத் தடுக்க 22 கண்காணிப்பு கேமராக்கள்

7th Sep 2019 04:04 AM

ADVERTISEMENT


சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில், குற்றச்சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையிலும் ரூ.12 லட்சத்தில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இப்பகுதியில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், திருவள்ளூர் சாலை, வாலாஜாபாத் சாலை, காஞ்சிபுரம் சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸார் முடிவு செய்தனர். 
இதையடுத்து,  சுங்குவார்சத்திரம் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சியட் டயர் நிறுவனம் சார்பாக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 22 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. 
இந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் பங்கேற்று கேமராக்களின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதில் வியாபாரிகள் சங்கத்தினர், சியட் டயர் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT