காஞ்சிபுரம்

இரவுக்காவலர், மசால்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

7th Sep 2019 04:06 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவுக்காவலர் மற்றும் மசால்சி பணிக்கு வரும் 30 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா.பொன்னையா 
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக் குறிப்பு: 
மாவட்ட ஆட்சியர், சார்-ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலங்களில் காலியாகவுள்ள 16 இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், மாவட்ட ஆட்சியர், சார் -ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மொத்தம் 16 மசால்சி பணியிடங்கள் காலியாகவுள்ளன. 
வயது வரம்பு: வயது 18 பூர்த்தியடைந்தவர்களாகவும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 35 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 32 வயதுக்குள்ளும், பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 
மாத சம்பளம் ரூ.15,700-50 ஆயிரம் வரை மற்றும் இதர படிகளும். விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் கல்வித்தகுதி, வயது, நிரந்தர முகவரி போன்ற விவரங்களை இணைத்து இரவுக்காவலர் பணிக்கான விண்ணப்பம், மசால்சி பணிக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT