வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

அத்திவரதர் வைபவ மலர் வெளியீடு

DIN | Published: 06th September 2019 04:31 AM
மலரை வெளியிட்ட முன்னாள் எம்எல்ஏ ஜெய். பாலாஜி, பெற்றுக்கொண்ட கே.எம்.தாமோதரன் உள்ளிட்டோர்.


காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள யதுகுல வேணுகோபால பஜனை மந்திர மண்டபத்தில் அத்திவரதர் வைபவ மலர் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சு.முத்துகணேசன் தலைமை வகித்தார். பஜனை மந்திர மண்டபத்தின் நிர்வாகக் குழு தலைவர் பி.குலசேகரப்பிள்ளை, துணைத் தலைவர் வி.ஜானகிராமன், செயலாளர் எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நூலாசிரியர் புலவர் விசூர்.மாணிக்கம் வரவேற்றார். 
அத்திவரதர் வைபவ மலரை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெய். பாலாஜி வெளியிட அதன் முதல் பிரதியை கே.எம்.தாமோதரனும், 2-ஆவது  பிரதியை மாதவன்  ராமாநுஜ தாசனும்  பெற்றுக்கொண்டனர். 
நிகழ்ச்சியில், கண்ணன் அவதார விழாக்குழு தலைவர் இ.கண்ணபிரான், துணைத் தலைவர்கள் வி.ஜீவானந்தம், ஜி.மாதவன், செயலாளர் ஆர்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கண்ணன் அவதார விழாவையொட்டி ருக்மணி திருமணம் என்ற தலைப்பில் சு.முத்து கணேசன் இலக்கியச் சொற்பொழிவாற்றினார். 


 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி
செப்டம்பர் 19 மின்தடை பகுதிகள்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாணவர் காவல்படை தொடங்கப்படும்: டிஐஜி எம்.சத்யப்பிரியா
பெரியார் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
பிரதமர் மோடி பிறந்த நாள்: காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு