காஞ்சிபுரம்

விநாயகர் சதுர்த்தி வீதி உலா

4th Sep 2019 04:25 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு ஜிஎஸ்டிசாலையில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, திங்கள்கிழமை இரவு வீதி உலா நடைபெற்றது. 
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, திங்கள்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை வெள்ளிக்கவச அலங்காரம் நடைபெற்றது. இரவு 11 மணிவரை பக்தர்கள் விநாயகரை வழிபாடு செய்ய வந்தவண்ணம் இருந்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வீதி உலா சென்றார். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், மேலாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோல் செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில், அண்ணா நகர் ரத்தின விநாயகர் கோயில், ராட்டினங்கிணறு அருகே ரயில்வே காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், சின்னநத்தம் சுந்தர விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது. இரவு உற்சவ மூர்த்திதகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT