காஞ்சிபுரம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் பஞ்ச சம்ஸ்கார விழா

4th Sep 2019 04:27 AM

ADVERTISEMENT


மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் ராமாநுஜர் உபதேசம் பெற்ற பஞ்ச சம்ஸ்கார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுராந்தகத்தின் முக்கிய வைணவக் கோயிலாக திகழ்வது ஏரிகாத்த ராமர் கோயில். ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக மதுராந்தகம் இல்லாவிட்டாலும், ராமபிரான் தன் அன்பினால் ஏரி வெள்ளநீரைத் தடுத்து நிறுத்தி, ஊர் மக்களைக் காப்பாற்றிய அவருடைய அன்புக்கு ஆள்பட்ட தலமாக விளங்கி வருகிறது. 

இங்கு ஆவணி மாதம் பஞ்சமி திதியன்று வைணவ ஆச்சாரியரான ராமாநுஜர் உபதேசம் பெற்ற திருநாளை பக்தர்கள் பஞ்ச சம்ஸ்கார விழாவாகக் கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்ல பஞ்சமி திதியன்று இந்த விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வைணவ ஆச்சாரியரான ராமாநுஜர், பெரிய நம்பிகள் மேளதாளம் முழங்க, மதுராந்தகம் ஏரிக்கரைக்கு எழுந்தருளி, அங்கு வேதவிற்பன்னர்கள் திருமஞ்சனம், சிறப்புப் பூஜைகளை செய்தனர். 

பின்னர், கோயில் வளாகத்தின் பின்புறம் ராமாநுஜர் தமது குருவான பெரிய நம்பிகள் மூலமாக பஞ்ச சம்ஸ்கார உபதேசம் பெற்றதன் அடையாளமாக, வகுளா மரத்தின்கீழ், அருகில் உள்ள மண்டபத்தில் ஏழுந்தருளி, அங்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. ராமாநுஜர் வெள்ளை துணி அணிந்து கிருகஸ்தராக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்களும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT