காஞ்சிபுரம்

பைக் மீது கார் மோதியதில் இருவர் பலி

4th Sep 2019 04:23 AM

ADVERTISEMENT


படப்பை அருகே பைக் மீது கார் மோதியதில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
கரசங்கால் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்துளசி (34). இவரது நண்பர் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (33). இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வல்லக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் கரசங்கால் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
வண்டலூர்-வாலாஜாபாத் சாலை ஆரம்பாக்கம் இணைப்புச் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
இதுகுறித்து மணிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT