காஞ்சிபுரம்

பட்டு நெசவாளரைப் பாராட்டிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

4th Sep 2019 04:26 AM

ADVERTISEMENT


அத்திவரதர் உருவத்தை பட்டு வேட்டியில் நெய்து கொடுத்த நெசவாளரை காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை நேரில் வரவழைத்து பாராட்டினார்.
காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்த நெசவாளர் குமாரவேல் (34). பட்டுச் சேலை உற்பத்தியாளரான இவர், அத்திவரதர் பெருவிழாவின் 46-ஆம் நாளன்று பட்டு வேட்டியில் அத்திவரதர் உருவத்தை நெய்து, அத்திவரதருக்கு வழங்கி சுவாமிக்கு சாத்தப்பட்டது.
இதையறிந்த காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நெசவாளர் குமாரவேலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  ஆஸ்திக சமாஜத்துக்கு வரவழைத்து சால்வை அணிவித்து, பழங்கள் வழங்கிப் பாராட்டினார்.
இதுகுறித்து பட்டு நெசவாளர் எஸ்.குமாரவேல் கூறியது:
அத்திவரதருக்கு பட்டு வேட்டி செய்வது என முடிவு செய்து 6 நாள்களில் அவரது உருவம் தங்க ஜரிகையில் தயாரித்தோம். 
அதை அத்திவரதர் விழாவின் 46-ஆம் நாளன்று சுவாமிக்கு வழங்கி தரிசனம் செய்தோம். இதை முகநூலில் பதிவிட்டிருந்தேன். 
இதையறிந்த காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேரில் வரவழைத்து எனது திறமையைப் பாராட்டினார். பழங்கள் தந்து, சால்வை அணிவித்து பாராட்டினார். சுவாமிகளிடம் ஆசி பெற்றது எனது திறமைக்குக் கிடைத்த பரிசாக நினைக்கிறேன். 
இந்தப் பட்டு வேட்டியைத் தயாரிக்க ரூ. 25 ஆயிரம் செலவானது. அத்திவரதர்  உருவம் பொறித்த பட்டு வேட்டியின் மாதிரி புகைப்படத்தையும் சுவாமிகளிடம் வழங்கினேன் என்றார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT