காஞ்சிபுரம்

சாலை விபத்தில் பெண் உள்பட இருவர் பலி

4th Sep 2019 04:23 AM

ADVERTISEMENT


மாமல்லபுரம் அருகே சாலைப் பகுப்பானில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். 
சென்னை, வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த தர்மராஜின் மனைவி தாட்சாயணி (28). இவரும், இவரது மூத்த சகோதரியின் மகன்  பிரதீப்பும் (19) மாமல்லபுரத்தை அடுத்த முட்டுக்காடு வசவன் குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை இரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாமல்லபுரத்தை அடுத்த  பட்டிப்புலம்  அருகே வந்தபோது, சாலை வளைவில் அதே பகுதியைச் சேர்ந்த கங்காதரன் இரு சக்கர வாகனத்தில்  திடீரென குறுக்கே வந்ததாகத் தெரிகிறது. அப்போது அவரது வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரதீப் முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலைப் பகுப்பான் மீது மோதியது. 
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த  பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாட்சாயணி பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார், உதவி ஆய்வாளர் சதாசிவம் மற்றும் போலீஸார்  தாட்சாயணியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தாட்சாயணி உயிரிழந்தார்.  
இதுகுறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT