காஞ்சிபுரம்

சங்கரா பல்கலை.யில் ரத்த தான முகாம்

4th Sep 2019 04:25 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மையத்தில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பல்கலைக்கழக கலைத் துறை முதல்வர் ராமகிருஷ்ண பிசுபாடி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி ரத்த சேமிப்புப் பிரிவு மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் 109 மாணவ, மாணவிகளிடம் இருந்து ரத்த தானம் பெற்றனர். 
முகாமுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மருத்துவ மைய மருத்துவர் சாய்நாதன் மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT