காஞ்சிபுரம்

கொள்ளையடிக்கத் திட்டம்: 5 பேர் கைது

4th Sep 2019 04:23 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்த 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் கோயில் தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா நூற்றாண்டு நினைவுப் பூங்கா உள்ளது. இதில், 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, உருட்டுக் கட்டைகளுடன் தங்கியிருப்பதாக சின்னக் காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், 4  உருட்டுக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரவீண் (22), மகேஷ் (22), கார்த்திக் (24),புஷ்பநாதன் (26), தீபக் (25) என்பதும், இவர்கள் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 
இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள்கள் சிறைக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT