காஞ்சிபுரம்

கொலை முயற்சி: 3 பேர் கைது

4th Sep 2019 04:22 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு அருகே ரெளடியை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். 
ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனை திம்மாவரம் அண்ணா நகரைச் சேர்ந்த ரெளடி விஜி கடந்த 2014-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்தாராம்.
இந்நிலையில், மணிகண்டனின் சகோதரி மகன் சதீஷ் (24), இவரது நண்பர் காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த மிதுன்குமார் (24), சரண் (34) ஆகியோர் விஜியை கொலை செய்ய அவரது வீட்டுக்கு கடந்த 31-ஆம் தேதி சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் வீட்டில் இல்லாததால் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சதீஷ், மிதுன்குமார், சரண் ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT