காஞ்சிபுரம்

ரூ.5.74 கோடியில் 1,593 பேருக்கு தாலிக்குத் தங்கம்: ஆட்சியர் வழங்கினார்

5th Oct 2019 05:47 AM

ADVERTISEMENT


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,593 பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் திருமண உதவியாக தலா 8 கிராம் தாலிக்குத் தங்கத்தை ஆட்சியர் பா.பொன்னையா  வெள்ளிக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கலையரங்கில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுந்தரமூர்த்தி,  சட்டப் பேரவை உறுப்பினர்கள் சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), கே.பழனி (ஸ்ரீபெரும்புதூர்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா வரவேற்றார். 
இவ்விழாவில் ரூ.5 கோடியே 74 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் 1,593 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்குத் தங்கத்தை வழங்கி ஆட்சியர் பா.பொன்னையா பேசியது:
சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 39,141 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
முதலில் தலா 4 கிராம் என வழங்கப்பட்டது. பின்னர் 8 கிராமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் 4,600 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல்கட்டமாக தற்போது 1,593 பேருக்கு தலா 8 கிராம் வீதம் 12.744 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.  நிகழ்வில், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியச் செயலர் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT