மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தில் மேல்மருவத்தூர் அரிமா சங்கத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக்காக மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெகிழிப் பயன்பாட்டை ஒழித்து, மரக்கன்றுகளை வளர்த்து, மழை நீரை சேமிக்க வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி, சோத்துப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
பெரியவர்களுக்கான பிரிவில் ஏ.கோபாலநந்தன் முதலிடமும், டி.கோகுல் 2-ஆமிடமும், எஸ்.சிற்றரசு 3-ஆமிடமும் பெற்றனர். சிறுவர்களுக்கான பிரிவில் கே.பெருமாள் முதலிடமும், கே.மேகவண்ணன் 2-ஆம் இடமும் பெற்றனர்.