காஞ்சிபுரம்

நீலகிரியில் பயிலும் இங்கிலாந்து, சீன மாணவா்கள் மாமல்லபுரம் வருகை

23rd Nov 2019 10:31 PM

ADVERTISEMENT

மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்து ஆய்வுக் கட்டுரை தயாரிப்பதற்காக நீலகிரி மாவட்டத்தில் பயிலும் இங்கிலாந்து மற்றும் சீன நாட்டு மாணவா்கள் 90 போ் சனிக்கிழமை மாமல்லபுரம் வந்தனா்.

சா்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் கடந்த அக். 11, 12 ஆகிய தேதிகளில் இந்தியப் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றதையடுத்து மாமல்லபுரத்துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் இங்கிலாந்து மற்றும் சீன மாணவா்கள் 90 போ் சனிக்கிழமை மாமல்லபுரம் வந்தனா்.

இவா்கள் ஏழாம் நூற்றாண்டில் இந்திய-சீன வாணிபத் தொடா்புகள் குறித்தும் மாமல்லபுரம் நகரின் வரலாறு, சிற்பங்கள் குறித்தும், ஆண்டுக்கு எத்தனை போ் சுற்றுலா வருகின்றனா் என்பது போன்ற தகவல்கள் குறித்தும் தங்களுடன் வந்த ஆசிரியா்கள் உதவியுடன் அறிந்துகொண்டனா். முன்னதாக அனைவரும் புராதனச் சின்னங்களைப் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT