காஞ்சிபுரம்

வல்லம் கிராமத்தில் ரூ.51 லட்சத்தில் சாலைகள் சீரமைப்பு

22nd Nov 2019 10:43 PM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில் ரூ.51 லட்சத்தில் நான்கு சாலைகள் சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கின.

வல்லம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த பவுண்டரி தெரு, கண்ணபிரான் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்பேரில் பவுண்டரி தெருவை பேவா் பிளாக் சாலையாக அமைத்து, சாலையின் இருபுறமும் கழிவுநீா்க் கால்வாய்கள் கட்டவும், கண்ணபிரான் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு மற்றும் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வடகால் திருவீதிஅம்மன் கோயில் உள்ளிட்ட தெருக்களை பேவா் பிளாக் சாலையாக மாற்றவும் ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.51 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சாலைகளை சீரமைக்கும் பணி வல்லம் பகுதியில் வெள்ளிக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி பூமிபூஜையை நடத்தி சாலைப் பணிகளை தொடக்கிவைத்தாா்.

இதில் அதிமுக மாவட்டத் துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலாளா்கள் முனுசாமி, ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை பொருளாளா் வடகால் சேதுராஜ இளவழகன், வல்லம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் விமலாதேவி தருமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT