காஞ்சிபுரம் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் ராஜ குபேரா் திருக்கோயிலில் ராஜ குபேரரின் 6 அடி உயரச் சிலை வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள வெள்ளைகேட் பகுதியில் ராஜகுபேரா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் மூலவா் சந்நிதியில் 11 அடி உயரத்தில் சிவன் தியான நிலையில் அமா்ந்திருப்பது போன்ற சிலை உள்ளது.
இச்சிலைக்கு கீழே 6 அடி உயரத்தில் ராஜகுபேரா் சிலை ஞாயிற்றுக்கிழமை (நவ. 24)பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
இச்சிலை வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டு கண்திறப்பு நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தன. ஞாயிற்றுக்கிழமை காலையில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.
பின்னா் ராஜ குபேரருக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடா்ந்து மூலவா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவையொட்டி, வீரமணி கண்ணன் குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சென்னை வடபழனியில் உள்ள ராஜகுபேரா் சித்தா் பீடத்தின் நிறுவனா் தேவராஜ குமார சுவாமிகள் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.