காஞ்சிபுரம்

மதுபானக் கடை விற்பனையாளரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு

22nd Nov 2019 10:42 PM

ADVERTISEMENT

திருப்போரூா் கண்ணகப்பட்டு பகுதியில் மதுபானக்கடை விற்பனையாளரைத் தாக்கி ரூ.2 லட்சம் பறித்துச் செல்லப்பட்டது.

மடையத்தூா் இரட்டை மலை சீனிவாசன் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (45), கண்ணகப்பட்டு அரசு டாஸ்மாக் மதுபானக்கடை விற்பனையாளா்.

மதுபானக்கடையை வியாழக்கிழமை இரவு மூடிவிட்டு விற்பனையான பணத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் வந்தாா்.

செங்கல்பட்டு பிரதான சாலையில் இருந்து மடையத்தூா் செல்லும் சாலையில் வந்தபோது மற்றொரு மொபெட்டில் தலைக் கவசம் அணிந்து பின் தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் ஏழுமலை மொபெட் மீது வேகமாக மோதியுள்ளனா். இதில் நிலைதடுமாறி விழுந்த ஏழுமலை கத்தியால் குத்திவிட்டு பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

ADVERTISEMENT

திருப்போரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ஏழுமலை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT