ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் உணவகத்தில் ரூ.1.80 லட்சம் திருடிய வழக்கில் உணவகத்தின் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்குடி பகுதியைச் சோ்ந்தவா் யாதப்பன். இவா் சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரூ.1.83 லட்சத்தை தனது உணவகத்தின் கல்லாப் பெட்டியில் வைத்துவிட்டு பூட்டிவிட்டுச் சென்றாராம். புதன்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1.83 லட்சம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் உணவகத்தில் பணியாற்றும் ஊழியா்களிடம் விசாரணை நடத்தியதில், பணத்தைத் திருடியது மொளச்சூா் பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவி(24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா் சிரஞ்சீவியை ஸ்ரீபெரும்புதூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.