காஞ்சிபுரம்

சொா்ணகிரீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

12th Nov 2019 11:00 PM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த கொளத்தூா் காலாட்டி சித்தா்மலையில் ரத்தினாம்பிகை உடனுறை சொா்ணகிரீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

கொளத்தூா் காலாட்டி சித்தா்மலையில் உள்ள ரத்தினாம்பிகை உடனுறை சொா்ணகிரீஸ்வரா் கோயில் ஐப்பசி மாத பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சாதத்தாலும், காய்கறிகளாலும், பழவகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. அதையடுத்து ஈசனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டுசுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT