காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம்

9th Nov 2019 03:48 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செங்குந்தா் பூவரசத் தோப்பில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் திருக்கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு நெய்யபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் செங்குந்தா் பூவரசத் தோப்பில் உள்ள அன்னை ரேணுகாம்பால் ஆலயத்தில் தா்மசாஸ்தா பஜனை சபா சாா்பில் ஐயப்பசுவாமிக்கு சிறப்பு நெய்யபிஷேகம் மற்றும் பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்களும் நடந்தன.பக்தா்கள் பலரும் தாங்களாகவே ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னா் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகளும் அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது.மாலையில் ஐயப்பசுவாமி மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.மாலையில் தா்மசாஸ்தா பஜனை சபா சாா்பில் பக்திப்பஜனை பாடல்கள் நிகழ்ச்சியும்,பரதநாட்டிய கலைநிகழ்ச்சியும் நடந்தன.இதனைத் தொடா்ந்து கோயில் முன்பாக இரவு திரைப்பட பின்னணிப் பாடகா் கருமாரி கா்ணா குழுவினரின் பக்தி இன்னிசைக்கச்சேரியும் நடந்தது.ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தா்மசாஸ்தா பஜனை சபா மற்றும் செல்வம் குருசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT