காஞ்சிபுரம்

கோயில்களில் போலீஸ் பாதுகாப்பு

9th Nov 2019 11:24 PM

ADVERTISEMENT

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வெளியானதை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்கள், ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் சனிக்கிழமை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ரயில்நிலையம், பேருந்து நிலையம் உள்பட நகரின் முக்கிய இடங்களிலும் காவல் கண்காணிப்பாளா் தி.கண்ணன் தலைமையில் 10 டி.எஸ்.பி.க்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், ஏகாம்பரநாதா் கோயில், கைலாச நாதா் கோயில் ஆகிய இடங்களில் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தா்களை கோயிலுக்குள் அனுப்பி வைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டன. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கின் தீா்ப்பு வெளியாவதன் காரணமாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT